ad
Press Statements

புதிய ஆட்டக்காரர்களைச் சேர்க்கும் திட்டம் இல்லை- சிலாங்கூர் எஃப்.சி. கூறுகிறது

24 மே 2021, 1:58 AM
புதிய ஆட்டக்காரர்களைச் சேர்க்கும் திட்டம் இல்லை- சிலாங்கூர் எஃப்.சி. கூறுகிறது

ஷா ஆலம், மே 24- மலேசிய லீக் கிண்ணப் போட்டிகள் முடிவுக்கு வர இன்னும் பத்தே நாட்கள் எஞ்சியுள்ள நிலையில் தனது  குழுவில் புதிய ஆட்டக்காரர்களைச் சேர்க்க சிலாங்கூர் எஃ.சி. குழு திட்டமிடவில்லை.

அதேசமயம், அணியில் இடம் பெற்றுள்ள பழைய ஆட்டக்காரர்கள் உள்பட யாரையும் நீக்கும் திட்டத்தையும் தாங்கள் கொண்டிருக்கவில்லை என்று குழுவின் நிர்வாகி மாபிஸூல் ருஸ்யிடின் கூறினார்.

புதிய ஆட்டக்காரர்கள் யரையும் சேர்க்காமல்  தற்போதுள்ள விளையாட்டாளர்களைக் கொண்டு அடுத்து வரும் ஆட்டங்களைச் சந்திக்கத தயாராக இருக்கிறோம் என்றார் அவர்.

காயமடைந்துள்ள நிக் ஷாரி ஹஸ்லி, திம் ஹியுபெக், சபுவான் பகாருடின் ஆகிய ஆட்டக்காரர்கள் லீக் கிண்ண போட்டிகள் வரும் ஜூலை மாதம் மீண்டும் தொடங்கும் போது உடல் நிலை தேறி மீண்டும் ஆட்டத்தில் பங்கேற்பர் எனத் தாங்கள் நம்புவதாகவும் அவர் கூறினார்.

இப்போட்டிகள் கடந்த மே மாதம் தொடங்கியது முதல் சிலாங்கூர் ஆட்டக்காரர்களை கவர்வதற்கு  இதர குழுக்கள் எதுவும் முயற்சி மேறகொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், வரும் மே 31ஆம் தேதிக்குள் எதுவும் நடக்கலாம். குழுவில் புது முகங்கள் இணையும் பட்சத்தில் அது குறித்து அறிவிக்கப்படும் என்றார் அவர்.

சூப்பர் லீக் ஆட்டத்தின் 13 ஆட்டங்களில் கலந்து கொண்டதன் வழி சிலாங்கூர் எஃப்.சி. குழு இதுவரை 19 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.