கோத்தா பாரு, மே 20- நாடு முழுவதும் முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல் செய்வது தொடர்பில் விவாதிப்பதற்காக நாளை நடைபெறும் கூட்டத்திற்கு பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் தலைமையேற்கவுள்ளார்.
புத்ரா ஜெயாவில் நடைபெறும் தேசிய பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் முழுமையான பொது முடக்கத்தை அமல் செய்வது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தக்கியுடின் ஹசான் கூறினார்.
நாளை தேசிய பாதுகாப்பு மன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள விஷயங்களில் நாட்டில் முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல் செய்வது தொடர்பான அம்சமும் அடங்கும். நாளை மாலை 3.00 மணிக்கு நடைபெறும் அந்த கூட்டத்தில் அனைத்து மந்திரி புசார்களும் முதலமைச்சர்களும் கலந்து கொள்வர் என்றார் அவர்.
நாட்டில் அதிகரித்து வரும் நோய்த் தொற்று பிரச்னையை அரசாங்கம் கடுமையாக கருதுகிறது. அந்நோயினால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஐந்து லட்சத்தை (485,496) தொட்டு விட்டது என்று அவர் குறிப்பிட்டார்.








