கோலாலம்பூர், மே,20- சாலைத் தடுப்பில் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்கள் மீது பட்டாசை கொளுத்தி வீசிய இரு ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணியளவில் காராக் நெடுஞ்சாலையில் கோம்பாக் டோல் சாவடி அருகே நிகழ்ந்தது.
பதினாறு மற்றும் இருபது வயதுடைய அவ்விரு இளைஞர்களும் மோட்டார் சைக்கிளை சாலைத் தடுப்புக்கு சற்று தள்ளி நிறுத்தியதைக் கண்டு போலீசார் சந்தேகம் கொண்டதாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அரிஃபாய் தராவே கூறினார்.
அவ்விளைஞர்களில் ஒருவன் திடீரென பட்டாசை கொளுத்தி பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்கள் மீது வீசிவிட்டு தன் சகாவுடன் மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து தப்பியோடினான் என்றார் அவர்.
போலீசார் அவர்களை துரத்தி சென்று சற்று தொலைவில் மடக்கிப் பிடித்ததாக கூறிய அவர், அவர்களிடமிருந்து 14 பட்டாசுகள் மற்றும் தீப்பெட்டியை பறிமுதல் செய்தனர் என்றார்.
கைதான இருவரும் விசாரணைக்காக வரும் வெள்ளிக்கிழமை வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சொன்னார்.
NATIONAL
சாலைத் தடுப்பில் போலீசார் மீது பட்டாசு வீச்சு- இரு இளைஞர்கள் கைது
20 மே 2021, 8:21 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
எங்களுக்கு நல்ல ஒற்றையர் வீரர்கள் இல்லை என்பது உண்மையல்ல-பிஏஎம்
Pakiya
7 மே 2026

national
தேசிய தினத்தை முன்னிட்டு பிரதமர் அன்வார் நாளை சிறப்புரை வழங்குவார்
Rajah Ramaya
29 ஆகஸ்ட் 2025

national
நாளை ஸ்மார்ட் பார்க்கிங் முறை மூன்று பிபிடிகளில் செயல்படுத்தப்படும்
Shalini Rajamogun
31 ஜூலை 2025

national
நிறுவன ஆலோசகராக கணவர் நியமனம்- பதவியை தவறாகப் பயன்படுத்தியதாக மனைவி மீது குற்றச்சாட்டு
Shalini Rajamogun
31 ஜூலை 2025

உங்கள் கருத்து என்ன?




