ECONOMY

கோவிட்-19 எண்ணிக்கை முதன் முறையாக ஆறாயிரத்தை தாண்டியது

19 மே 2021, 10:54 AM
கோவிட்-19 எண்ணிக்கை முதன் முறையாக ஆறாயிரத்தை தாண்டியது

ஷா ஆலம், மே 19- நாட்டில் இன்று கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை 6,075ஆக அபரிமித உயர்வு கண்டது. நாட்டில் கடந்தாண்டு நோய்த் தொற்று கண்டது முதல் அதிக எண்ணிக்கையில் நோய்த் தொற்று பதிவானது இதுவே முதன் முறையாகும்.

இதன் வழி நாட்டில் இந்த நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 485,496ஆக உயர்வு கண்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

அதிக நோய்த் தொற்று கண்ட மாநிலங்களில் சிலாங்கூர் தொடர்ந்து முதலிடம் விகிக்கிறது. இம்மாநிலத்தில் 2,251 பேர் இந்நோய்த் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர் என்றார் அவர். 699 சம்பவங்களுடன் கோலாலம்பூரும் 660 சம்பவங்களுடன் கோலாலம்பூரும், 445 சம்பவங்களுடன் கெடாவும் 323 சம்பவங்களுடன் கெடாவும் அதற்கு அடுத்த நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.