|
|
![]() ![]() |
|||
|
||||
கோலாலம்பூர், மே 19- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலகட்டத்தில் மாநில மற்றும் மாவட்ட எல்லைகளை கடப்பதற்கு போலி ஆவணங்களை பயன்படுத்தும் தரப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய போலீஸ் படை தலைவர் டத்தோ ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா எச்சரித்துள்ளார்.இத்தகைய குற்றங்களை புரிவோர் மீது சட்ட விதிகளுக்கு உட்பட்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
மாவட்ட அல்லது மாநில எல்லைகளை கடக்கும் போது பொதுமக்களில் சிலர் இத்தகைய குற்றங்களை புரிவது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு உதவும் வகையில் மாநில மற்றும் மாவட்ட எல்லைகளை கடப்பதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை காவல்துறை தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.
மாவட்ட அல்லது மாநில எல்லைகளை கடப்பதற்கான விண்ணப்பங்களை பரிசீலிப்பதில் அரச மலேசிய போலீஸ் படை மிகுந்த கவனப் போக்கை கடைபிடிக்கும் என்று அறிக்கை ஒன்றில் அவர் கூறினார்
கோவிட்-19 நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக எஸ் ஒ.பி. விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கும் படி பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்









