ad
Press Statements

வணிகர்கள் இலக்கவியலுக்கு  மாற டுசுன் துவா சட்டமன்ற உறுப்பினர் உதவி

30 ஏப்ரல் 2021, 9:37 AM
வணிகர்கள் இலக்கவியலுக்கு  மாற டுசுன் துவா சட்டமன்ற உறுப்பினர் உதவி

ஷா ஆலம், ஏப் 30- வர்த்தக நடவடிக்கைகள் புதிய பரிமாணத்தைப் பெறுவதற்கு ஏதுவாக வணிகர்கள் இலக்கவியலுக்கு மாறுவதற்கு தேவையான உதவிகளை டுசுன் துவா சட்டமன்ற உறுப்பினர்  எர்டி பைசால் எடி யூசுப் வழங்கி வருகிறார்.

வீரா எனும் பெயரில் அமல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம் இவ்வாண்டு தொடங்கி மேலும் ஆக்ககரமான முறையில் மேற்கொள்ளப் படுவதாக எர்டி கூறினார்.

வேலை இழந்த பலர் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் காரணமாக இத்திட்டம் இவ்வாண்டு தொடங்கி உத்வேகம் பெறத்  தொடங்கியுள்ளதாக அவ சொன்னார்.

இணையம் வழி மேற்கொள்ளப்படும் வர்த்தகத்தில் உள்ள   நெளிவு சுழிவுகளை வர்த்தகர்கள் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக ஷோப்பி போன்ற இணைய வர்த்தக நிறுவனங்களுடன் ஒத்துழைப்பு நல்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கால காலமாக வழக்கமான பணியில் வர்த்தகம் புரிந்தவர்களை இலக்கவியலுக்கு மாற்றுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. இது தவிர,உலு  லங்காட் வட்டாரத்தில் 1வது மைல் தொடங்கி 16வது மைல் வரை இணைய சேவை  மந்தமான நிலையில் உள்ளது என்றார் அவர்.

டுசுன் துவா தொகுதியிலுள்ள சிறு வர்த்தகர்கள் பொருளாதார மீட்சி பெறுவதில் உதவும் நோக்கில் இந்த வீரா திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.  இத்திட்டத்தில் பங்கேற்கும் வணிகர்கள் இலக்கவியல் துறையில் முழு ஈடுபாடு காட்டுகிறார்களா? என்பதை நாம் தொடர்ந்து உறுதி செய்து வருவோம்  என்று அவர் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.