NATIONAL

மாமன்னருக்கு உயரிய ‘டர்ஜா கெராபாட்‘ விருது- சிலாங்கூர் சுல்தான் வழங்கினார்

9 ஏப்ரல் 2021, 3:24 PM
மாமன்னருக்கு உயரிய ‘டர்ஜா கெராபாட்‘ விருது- சிலாங்கூர் சுல்தான் வழங்கினார்

ஷா ஆலம், ஏப் 9- மாட்சிமை தங்கிய பேரரசருக்கு மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் டர்ஜா கெராபாட் (டி.கே.) எனும் உயரிய விருதை வழங்கி கௌரவித்தார்.

கோலாலம்பூரிலுள்ள இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற சடங்கொன்றில் உயரிய அந்தஸ்து கொண்ட அந்த விருதை சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்கள் பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷாவுக்கு வழங்கினார்.

சிலாங்கூர் சுல்தானின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த விருது வழங்கப்பட்டது.

இதே நிகழ்வில் மாட்சிமை தங்கிய பேரரசர் அவர்கள் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தானுக்கு டி.கே. எனப்படும் டர்ஜா கெராபாட் ஸ்ரீ இண்ட்ரா மக்கோத்தா பகாங் எனும் உயரிய விருதை வழங்கினார்.

இந்நிகழ்வில் ராஜா பெர்மைசூரி அகோங் துங்கு ஹாஜா அமினா மைமுனா இஸ்கந்தரியாவும் சிலாங்கூர் துங்கு பெர்மைசூரி நோராஷிகினும் கலந்து கொண்டனர்.

பகாங் ராஜா மூடா, துங்கு மக்கோத்தா துங்கு  ஹஸ்னால் இப்ராஹிம் ஆலம் ஷா மற்றும் சிலாங்கூர் ராஜா மூடா துங்கு அமிர் ஷா ஆகியோரும் இந்நிகழ்வுக்கு வருகை புரிந்தனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.