NATIONAL

வாகனங்களில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகளை ஏற்றலாம்- அரசாங்கம் அனுமதி

19 பிப்ரவரி 2021, 4:16 AM
வாகனங்களில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகளை ஏற்றலாம்- அரசாங்கம் அனுமதி

கோலாலம்பூர், பிப் 19- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்ட மாநிலங்களில் நாளை முதல் வாகனங்களின் இருக்கைகளுக்கேற்ப பயணிகள் பயணிப்பதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.

இந்த விதிமுறை தளர்வு நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மற்றும் மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்ட பகுதிகளிலும் அமல் செய்யப்படுவதாக  பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

வாகனத்திற்கு இருவர் மட்டுமே என்ற நிபந்தனை வீடுகளில் தனியே விட்டுச் செல்ல முடியாத அளவுக்கு சிறு வயது பிள்ளைகளைக் கொண்டவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியதாக அவர் சொன்னார்.

இதன் அடிப்படையில் இவ்விவகாரத்தை பரிசீலித்த நுட்பக் குழு வாகனங்களின் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு அனுமதி வழங்கியது என்றார் அவர்.

வாகனத்தில் நான்கு இருக்கைகள் இருந்தால் நால்வர் அந்த வாகனத்தில் பயணம் செய்யலாம். ஆறு இருக்கைகள் இருக்கும் பட்சத்தில் அறுவர் பயணிக்கலாம் என்று புத்ரா ஜெயாவிலு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

வாகனங்களில் இருவர் மட்டுமே பயணம் செய்ய அரசாங்கம் இதற்கு முன்னர் அனுமதி வழங்கியிருந்தது

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.