NATIONAL

தைப்பூச இரத ஊர்வலத்திற்கு நிபந்தனையுடன் அனுமதி

24 ஜனவரி 2021, 1:46 PM
தைப்பூச இரத ஊர்வலத்திற்கு நிபந்தனையுடன் அனுமதி

ஷா ஆலம், ஜன 24- இம்மாதம் 28ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தைப்பூச விழாவையொட்டி இரத ஊர்வலம் நடத்துவதற்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த தைப்பூச விழாவை முன்னிட்டு  27ஆம் தேதி வெள்ளி இரதம் ஜாலான் பண்டார் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து பத்துமலை முருகன் திருத்தலத்திற்குச் செல்வதற்கும் மறுநாள் 29ஆம் தேதி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் திரும்புவதற்கும் தேசிய பாதுகாப்பு மன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பத்துக்கும் மேற்பட்டோர் இரத ஊர்வலத்தில் பங்கேற்கக்கூடாது, இரதம் வழியில் எங்கும் நிற்கக்கூடாது, நாதஸ்வரம் மற்றும் மேளதாளம் வாசிக்கக்கூடாது என்ற நிபந்தனைகள் ஆலய நிர்வாகத்தினருக்கு விதிக்கப்பட்டுள்ளதாக கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ அனுவார் மூசா கூறினார்.

இரத்த ஊர்வலத்தின் போது எஸ்.ஓ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறை முறையாக கடைபிடிக்கப்படுவதை கோலாலம்பூர் மாநகர் மன்றம் கண்காணிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.