NATIONAL

கோவிட்-19- இன்றைய நிலவரம்- 4,275 பேர் பாதிக்கப்பட்டனர்; 4313 பேர் குணமடைந்தனர்

23 ஜனவரி 2021, 12:59 PM
கோவிட்-19- இன்றைய நிலவரம்- 4,275 பேர் பாதிக்கப்பட்டனர்; 4313 பேர் குணமடைந்தனர்

கோலாலம்பூர், ஜன 23- கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று 4,275ஆக உயர்வு கண்டது. ஆகக்கடைசியாக கடந்த 16ஆம் தேதி அதிகப்பட்சமாக 4,029 சம்பவங்கள் நாட்டில் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம், இந்நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 4,313ஐ எட்டி புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. இதன் வழி குணமடைந்தவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 137,091ஆக உயர்ந்துள்ளது.

இன்று நாட்டில் பதிவான கோவிட்-19 சம்பவங்களில் 4,264 உள்நாட்டில் பரவிய வேளையில் எஞ்சிய 11 சம்பவங்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியானவை என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

அந்நோய்க்கு இன்று 16 பேர் பலியானதாக கூறிய அவர், அந்நோயினால் மாண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 667ஆக உயர்ந்துள்ளது என்றார்.

260 நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் 103 பேருக்கு சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.