NATIONAL

பிப்ரவரி 4 வரை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிப்பு

21 ஜனவரி 2021, 11:25 AM
பிப்ரவரி 4 வரை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிப்பு

ஷா ஆலம், ஜன 21- சிலாங்கூர் உள்பட ஆறு மாநிலங்களில் இம்மாதம் 6ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அடுத்த மாதம் 4ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிலாங்கூர், பினாங்கு, மலாக்கா, ஜோகூர், சபா மற்றும் கோலாலம்பூர், புத்ரா ஜெயா, லபுவானை உள்ளடக்கிய கூட்டரசு பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த ஆணை அமல்படுத்தப்படுவதாக பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

கோவிட்-19 நோய்த் தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு சுகாதார அமைச்சு வழங்கிய ஆலோசனை மற்றும் இடர் மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.