ALAM SEKITAR & CUACA

நான்கு மாநிலங்களில் நாளை வரை மோசமான வானிலை

12 ஜனவரி 2021, 3:05 AM
நான்கு மாநிலங்களில் நாளை வரை மோசமான வானிலை

கோலாலம்பூர், ஜன 11- மோசமான வானிலை காரணமாக பகாங், சரவா, ஜோகூர், சபா ஆகிய மாநிலங்களில் நாளை வரை கடுமையான மழை பெய்யும்  சாத்தியம் உள்ளதாக மலேசிய வானிலை ஆய்வுத்துறை எச்சரித்துள்ளது.

பகாங் மாநிலத்தின் மாரான், குவாந்தான், பெரா, பெக்கான் மற்றும் ரொம்பின் ஆகிய மாவட்டங்களில் கனத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக அத்துறை அறிக்கை ஒன்றில் கூறியது.

ஜோகூர் மாநிலத்தின் சிகாமாட், குளுவாங், மெர்சிங், பொந்தியான், கூலாய், கோத்தா திங்கி, ஜோகூர் பாரு ஆகிய மாவட்டங்களும் அடை  மழையினால் பாதிக்கப்படும் என்றும் அது எச்சரித்தது.

சரவா மாநிலத்தின் கூச்சிங், செரியான், சமராஹான், பெத்தோங், சரிக்கேய், சிபு, முக்கா, ஸ்ரீ அமான் ஆகிய பகுதிகளும் சபாவில் கோல பென்யூ, தம்புனான், பியூபோர்ட், சண்டகான் லபுவான் ஆகிய மாவட்டங்களும் மோசமான வானிலையை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.