|
ஷா ஆலம், ஜன 7 : சிலாங்கூரில் 3வது புதிய மாநகராக உருவெடுத்துள்ள சுபாங் ஜெயா மாநகருக்கான புதிய உறுப்பினர்களின் பதவியேற்பு நேற்று ஜனவரி 6ம் தேதி பிற்பகல் 2.00 மணிக்குச் சுபாங் ஜெயா மாநகர் மண்டபத்தில் நடைபெற்றது. இந்தத் தவணையில் சுபாங் ஜெயா மாநகரச் சபைக்கு ஆறு இந்தியர்கள் மாநகர் சபை உறுப்பினர்களாகப் பதவி ஏற்றுள்ளனர்.
அந்தப் பதவி ஏற்பு வைபவத்தில் டிசம்பர் 2020துடன் பணி காலம் நிறைவு பெற்று, மீண்டும் 2 ஆண்டுகளுக்குப் பதவிக்காலம் நீடிக்கப் பட்டவர்களும் இந்த ஆண்டு புதிதாகப் பதவி ஏற்பவர்களும் கலந்து கொண்டனர்.
இம்முறை புதிய மாநகர சபையில் ஜ. செ. க கட்சியைப் பிரதிநிதித்து மூன்று இந்தியர்களும், கெஅடிலான் கட்சியின் சார்பில் மூவருமாக மொத்தம் ஆறு இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். ஜ.செ.க கட்சியைப் பிரதிநிதித்து திரு.மோகன் சிங். திரு மேகநாதன் இன்பமூர்த்தி, திரு. தமிழ் அரசு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கெஅடிலான் கட்சியின் சார்பில் பதவி வகிப்பவர்களில் திரு. அன்பரசன் முருகேசு மற்றும் முகமட் பிட்ரி பின் ஜமாலுதின் இருவரும் பழைய முகங்கள். நூர் லியானா பிந்தி யஹ்யா, திரு கெனத்செம் சாமிநாதன் மற்றும் திரு. ஜஸ்டின் ராஜ் சவரிமுத்து ஆகிய மூவரும் புதியவர்கள் ஆவர்.
இதில் ஜஸ்டின் ராஜ் கெஅடிலான் இளைஞர் பகுதியின் தேசிய உதவித் தலைவர், முன்பு சிலாங்கூர் விளையாட்டு துறையின் துணை நிர்வாகியாகவும் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
|
|
PBT
புதிய மாநகராக உருவெடுத்துள்ள சுபாங் ஜெயா மாநகருக்கான புதிய உறுப்பினர்களின் பதவி ஏற்பு
7 ஜனவரி 2021, 4:32 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
ஊராட்சி மன்ற வணிக வளாகங்களின் வாடகை குறைப்பு: சிலாங்கூர் மாநில அரசு பரிசீலனை
Shalini Rajamogun
6 மே 2026

selangor
உள்ளூராட்சி மன்றங்களின் செலவுகள் அதிகரிப்பு: மதிப்பீட்டு வரி உயர்த்தப்படாது என சிலாங்கூர் உறுதி
Shalini Rajamogun
29 ஏப்ரல் 2026

selangor
எரிவாயு விலை உயர்ந்தாலும் மின் மயான சேவை கட்டணம் உயராது: சிப்பாங் நகராண்மைக் கழகம் அறிவிப்பு
Shalini Rajamogun, Dewi Abdul Rahman
24 ஏப்ரல் 2026

selangor
உள்ளூராட்சி மன்றங்களை உள்ளடக்கிய ஆளுமை அமைப்பு சீர்திருத்தம் விரைவாகச் செயல்படுத்தப்பட வேண்டும்
Shalini Rajamogun
20 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




