NATIONAL

கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை 970 ஆக குறைந்தது- சிலாங்கூரில் 115 பேர் பாதிப்பு

25 நவம்பர் 2020, 3:32 PM
கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை 970 ஆக குறைந்தது- சிலாங்கூரில் 115 பேர் பாதிப்பு

ஷா ஆலம், நவ 25- கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை இன்று 970 ஆக குறைந்துள்ளது. இதன் வழி நாட்டில் இந்நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 59,817 ஆக உயர்வு கண்டுள்ளது.

நாட்டில் நேற்று மிக அதிகமாக அதாவது 2,128 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகின.

சிலாங்கூரில் இன்று 115 பேருக்கு இந்நோய் கண்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. 97 பேர் குணமடைந்து வீடு திரும்பிய வேளையில் மூன்று மரணங்கள் பதிவு செய்யப்பட்டன.

இந்நோயிலிருந்து இன்று 2,348 பேர் குணமடைந்தனர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 46,501 ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக நான்கு மரணச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டு இந்நோய் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 345 ஆக உயர்வு கண்டதாக சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.