ALAM SEKITAR & CUACA

செமினி தொகுதியிலுள்ள எட்டு பள்ளிகளுக்கு மறுசூழற்சி தொட்டிகள் விநியோகம்

22 நவம்பர் 2020, 2:45 PM
செமினி தொகுதியிலுள்ள எட்டு பள்ளிகளுக்கு மறுசூழற்சி தொட்டிகள் விநியோகம்

ஷா ஆலம், நவ 21- செமினி சட்டமன்ற தொகுதியிலுள்ள எட்டு பள்ளிகளுக்கு காஜாங் நகராண்மைக்கழகம் மறுசூழற்சி தொட்டிகளை வழங்கியது.

மறுசூழற்சியின் முக்கியத்துவத்தை பள்ளி நிலையிலே தொடக்குவதற்கு ஏதுவாகவும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் இது மறுசூழற்சி மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பண்டார் தாசேக் செசுமா ஆரம்ப பள்ளி, கிர் ஜோஹாரி ஆரம்ப பள்ளி, பண்டார் ரிஞ்சிங் ஆரம்ப பள்ளி, செமினி ஆரம்ப பள்ளி, காஜாங், பண்டார் டெக்னோலோஜி ஆரம்ப பள்ளி ஆகிய பள்ளிகள் இந்த மறுசூழற்சி தொட்டிகளைப் பெற்றன.

இவை தவிர்த்து கிர் ஜோஹாரி இடைநிலைப்பள்ளி, பண்டார் தாசேக் கெசுமா இடைநிலைப்பள்ளி, பண்டார் ரிஞ்சிங் இடைநிலைப்பள்ளி, எங்கு உசேன் இடைநிலைப்பள்ளி, ஆகிய பள்ளிகளுக்கும் இந்த தொட்டிகள் வழங்கப்பட்டன.

உலு லங்காட் மாவட்ட கல்வி இலாகாவுடன் இணைந்து இத்திட்டத்தை காஜாங் நகராண்மைக்கழகம் மேற்கொண்டது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.