NATIONAL

மகளிர் வன்முறைக்கு எதிரான பிரசாரத்திற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு

9 நவம்பர் 2020, 5:20 PM
மகளிர் வன்முறைக்கு எதிரான பிரசாரத்திற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு

ஷா ஆலம், நவ 10- பெண்கள் துன்புறுத்தலுக்கு இலக்காவதை எதிர்த்து மேற்கொள்ளப்படும் பிரசாரத்திற்கு சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, சட்டமன்ற சபாநாயகர் இங் சுய் லிம், மகளிர் மேம்பாட்டிற்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இவ்வாண்டிற்கான அந்த பிரசார இயக்கத்திற்கு  ஆதரவை புலப்படுத்தும் வகையில் அவர்கள் ’வன்முறையை நிறுத்துங்கள், பெண்களுக்கு மதிப்பளியுங்கள்‘ எனும் வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

மகளிர் வன்முறைக்கு எதிரான கருப்பொருளாகவும் இந்த இயக்கத்திற்கான ஆதரவின் அடையாளமாகவும் விளங்கும் ஆரஞ்சு  நிறத்திலான சுவாசக் கவசங்களை அவர்கள் அணிந்திருந்தனர்.

பாலின ரீதியாக மேற்கொள்ளப்படும் வன்முறைக்கு எதிரான 16 நாள் இயக்க தினம் நவம்பர் மாதம் 25ஆம் தேதி முதல் டிசம்பர் 10ஆம் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது.

பொது சுகாதாரம், ஒற்றுமை, குடும்ப மற்றும் மகளிர் மேம்பாட்டிற்கான ஆட்சிக்குழு இந்த நிகழ்வை ஏற்று நடத்துகிறது.

குடும்ப வன்முறையை முற்றாக துடைத்தொழித்து சுபிட்சமான குடும்பத்தை உருவாக்கும நோக்கிலான இந்த இயக்கத்திற்கு பொதுமக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என்று டாக்டர் சித்தி மரியா கேட்டுக் கொண்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.