NATIONAL

பொது முடக்க காலம் வரை கே.எல்.- சிலாங்கூர் தேசிய பதிவுத் துறை அலுவலகங்கள் மூடப்படும்

24 அக்டோபர் 2020, 8:40 AM
பொது முடக்க காலம் வரை கே.எல்.- சிலாங்கூர் தேசிய பதிவுத் துறை அலுவலகங்கள் மூடப்படும்

கோலாலம்பூர், அக் 24- சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் உள்ள 15 தேசிய பதிவு துறை கிளை அலுவலகங்கள் இன்று தொடங்கி நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலம் முடியும் வரை மூடப்படும்.

பொது முடக்க நிபந்தனையின் அடிப்படையின் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக தேசிய பதிவுத் துறை அறிக்கை ஒன்றில் கூறியது.

கெப்போங், பண்டார் துன் ரசாக், சிபூத்தே, கோலக்கிள்ளான், ரவாங், கோத்தா டாமன்சாரா, தாமான் மெலாவத்தி, பெட்டாலிங், பூச்சோங், சிப்பாங், ஸ்ரீ கெம்பாங்கான், உலு லங்காட், சபாக் பெர்ணம் மற்றும் உலுசிலாங்கூர் ஆகிய இடங்களில் உள்ள அலுவலகங்கள் மூடப்படுவதாக அந்த அறிக்கை மேலும் கூறியது.

எனினும், தேசிய பதிவுத் துறையின் யு.டி.சி. கோலாலம்பூர் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டு இம்மாதம் 28ஆம் தேதி திறக்கப்படும்.

மேல் விபரங்கள் பெற விரும்பும் பொது மக்கள் புத்ரா ஜெயாவிலுள்ள தேசிய பதிவுத் துறை அலுவலகத்தின் தொடர்பு பிரிவுடன் 03-88807077 என்ற எண்களுடன் தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.