ad
SELANGOR

தாமான் டெம்ப்ளர் சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில் இலவச போக்குவரத்து சேவை

14 அக்டோபர் 2020, 3:31 AM
தாமான் டெம்ப்ளர் சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில்  இலவச போக்குவரத்து சேவை

ரவாங், அக் 14 -மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் வகையில் ரவாங் சட்டமன்றத் தொகுதி சேவை மையம் இலவச போக்குவரத்து சேவையை வழங்கி வருகிறது.

ஒவ்வொரு புதன் கிழமையும் இத்தொகுதியிலுள்ள ஒன்பது இடங்களுக்கு இந்த இலவச சேவை மேற்கொள்ளப்படுவதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமது சானி ஹம்சா கூறினார்.

இச்சேவை இவ்வாண்டு தொடக்கத்தில் ஒரு வாகனத்துடன் ஆரம்பிக்கப்பட்டதாக கூறிய அவர், இச்சேவையைப் பெற விரும்புவோர் குறைந்தது இரு தினங்களுக்கு முன்னதாக தொகுதி சேவை மையத்தை தொடர்பு கொண்டு வாகன உதவிக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும் என்றார்.

மேபேங்க், பண்டார் பாரு செலாயாங் பேங்க் சிம்பானான் நேஷனல், செலாயாங் நகராண்மைக் கழகம், நில அலுவலகம், ஆயர் சிலாங்கூர் அலுவலகம், மாவட்ட போலீஸ் தலைமையகம், செலாயாங் மருத்துவமனை, சுகாதார மையம், அஞ்சலகம் ஆகிய இடங்களுக்கு இச்சேவை வழங்கப்படும் என்று முகமது சானி தெரிவித்தார்.

தங்கள் அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்களை வீட்டிற்கு வந்து அழைத்துச்  சென்று பணிகள் முடிந்தவுடன் வீட்டில் கொண்டு வந்து விட்டுச் செல்வர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.