புத்ரா ஜெயா, அக், 1- கடந்தாண்டில் அதிகமான உள்நாட்டு சுற்றுலா பயணிகளைஈர்த்த மாநிலமாக சிலாங்கூர் விளங்குகிறது.
உள்நாட்டு சுற்றுலா மூலம் சிலாங்கூர் கடந்தாண்டு 1,550 கோடி வெள்ளியை
ஈட்டியுள்ளது உள்நாட்டு சுற்றுலா தொடர்பான ஆய்வில் தெரியவந்துள்ளது.
மாநில ரீதியாக வெளியிடப்பட்ட இந்த பட்டியலில் சிலாங்கூர் முதலிடம் வகிக்கும் வேளையில் 1,210 கோடி வெள்ளி வருமானத்துடன் கூட்டசு பிரதேசம் இரண்டாம்
இடத்தில் உள்ளது.
அதற்கு அடுத்த நிலையில் சரவா (870 கோடி வெள்ளி), சபா (810 கோடி வெள்ளி), பேராக் (780 கோடி வெள்ளி) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
கடந்தாண்டில் உள்நாட்டு சுற்றுலா மூலம் செலவிடப்பட்ட மொத்த தொகையில் 50.6 விழுக்காட்டு பங்களிப்பை இந்த ஐந்து மாநிலங்கள வழங்கியதாக மலேசிய புள்ளிவிவரத் துறை தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் முகமது உஸீர் மஹிடின் கூறினார்.
கடந்தாண்டில் சிலாங்கூருக்கு வருகை தந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின்
எண்ணிக்கை 3 கோடியே 36 லட்சம் பேர் எனக் குறிப்பிட்ட அவர், அதற்கு அடுத்த நிலையில் கோலாலம்பூருக்கு 2 கோடியே 26 லட்சம் பேரும் சபாவுக்கு 2.2 கோடி பேரும் பேராக் மாநிலத்திற்கு 2.11 கோடி பேரும் சரவாவிற்கு 1.98 கோடி பேரும்
வருகை புரிந்தனர் என்றார்.
விடுமுறையை கழிப்பதற்காக அதிகமானோர் அதாவது 42.8 விழுக்காடினர் மலாக்கா சென்றுள்ளனர். இந்த பட்டியலில் பினாங்கு, பகாங், சபா ஆகிய மாநிலங்கள் அடுத்த நிலையில் உள்ளன.
ECONOMY
அதிக உள்நாட்டு சுற்றுப்பயணிகள் சிலாங்கூருக்கு வருகை
1 அக்டோபர் 2020, 12:06 PM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
வாகன நிறுத்துமிட குற்றங்களுக்கு அபராதக் கழிவு
n.pakiya
18 அக்டோபர் 2020

selangor
கடல் பெருக்கை சமாளிக்க தடுப்பணைகள் வலுப்படுத்தப்படும்
n.pakiya
18 அக்டோபர் 2020

selangor
கோவிட் 19க்கு எதிரான போராட்டத்தில் போலீசார் மற்றும் சிறை வார்டன்- முன்னணி சேவையாளர்கள் அதிகம் பாதிப்பு
n.pakiya
18 அக்டோபர் 2020

selangor
கவனம் கோவிட் 19 நோய்த்தொற்று சம்பவங்கள் அதிகரிக்கிறது
n.pakiya
18 அக்டோபர் 2020

உங்கள் கருத்து என்ன?




