பூச்சோங், செப் 11- சுபாங் ஜெயா வட்டாரத்தை சேர்ந்த 503 பேருக்கு தற்காலிகவர்த்தக லைசன்ஸ் வழங்கப்பட்டது. சிறு வியாபாரிகளான இவர்கள் இதுநாள்
வரை லைசன்ஸ் இன்றி வர்த்தகத்தை நடத்தி வந்தனர்.
கடந்த ஜூன் மாதம் நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் இருந்த போது சிறு வியாபாரிகளுக்கு தற்காலிக லைசன்ஸ் வழங்கும் திட்டம் அமல் படுத்தப்பட்டதாக சுபாங் ஜெயா நகராண்மைக் கழக லைசன்ஸ் பிரிவு இயக்குநர்
முகமது அஸ்லி மிஸ்வான் கூறினார்.
கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக வருமானத்தை இழந்த வணிகர்களுக்கு உதவும் வகையில் இந்த திட்டம் அமல் படுத்தப்பட்டது என்று அவர் மேலும் சொன்னார்.
222 வியாபாரிகள் காலை, மாலை, இரவு வேளைகளில வியாபாரம் செய்வதற்கு
ஏதுவாக 12 புதிய வியாபார இடங்களை தாங்கள் அங்கீகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வியாபார அனுமதிக்கு விண்ணப்பம் செய்தோருக்கு குறிப்பாக பி 40 பிரிவினருக்கு
உதவும் வகையில் லைசன்ஸ் விண்ணப்பம் விரைந்து பரிசீலனை செய்ய பட்டதாக
அவர் மேலும் சொன்னார்.
தாமான் கின்ராராவில் நடைபெற்ற வர்த்தகர்களுக்கு தற்காலிக லைசன்ஸ் வழங்கும் நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஸீ ஹான், சுபாங் ஜெயா நகராண்மைக் கழக தலைவர் நோராய்னி ரோஸ்லான் ஆகியோரும்
கலந்து கொண்டனர்.
ECONOMY
சுபாங் ஜெயாவில் 503 பேருக்கு தற்காலிக வர்த்தக லைசன்ஸ்
11 செப்டெம்பர் 2020, 7:38 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
வாகன நிறுத்துமிட குற்றங்களுக்கு அபராதக் கழிவு
n.pakiya
18 அக்டோபர் 2020

selangor
கடல் பெருக்கை சமாளிக்க தடுப்பணைகள் வலுப்படுத்தப்படும்
n.pakiya
18 அக்டோபர் 2020

selangor
கோவிட் 19க்கு எதிரான போராட்டத்தில் போலீசார் மற்றும் சிறை வார்டன்- முன்னணி சேவையாளர்கள் அதிகம் பாதிப்பு
n.pakiya
18 அக்டோபர் 2020

selangor
கவனம் கோவிட் 19 நோய்த்தொற்று சம்பவங்கள் அதிகரிக்கிறது
n.pakiya
18 அக்டோபர் 2020

உங்கள் கருத்து என்ன?




