NATIONAL

துன் மகாதீர், முக்ரீஸ் மகாதீர் மற்றும் மேலும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெர்சத்து கட்சியில் இருந்து நீக்கம் !!!

28 மே 2020, 1:45 PM
துன் மகாதீர், முக்ரீஸ் மகாதீர் மற்றும் மேலும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெர்சத்து கட்சியில் இருந்து நீக்கம் !!!

கோலா லம்பூர், மே 28:

பெர்சத்து கட்சியின் அவைத் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமட் , அவரது மகனும் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ  முக்ரிஸ் மகாதீர், கட்சியின் இளைஞர் பகுதித் தலைவர் சைட் சாடிக் அப்துல் ரஹ்மான், உச்ச மன்ற உறுப்பினரும் சிம்பாங் ரெங்கம் நாடாளுமன்ற உறுப்பினருமான மஸ்லீ மாலிக், மற்றும் குபாங் பாசு நாடாளுமன்ற உறுப்பினர் அமிருடின் ஹம்சா ஆகிய ஐவரும் பெர்சாத்து கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மே 18 நாடாளுமன்றக் கூட்டத்தின்போது எதிர் கட்சி வரிசையில் அமர்ந்ததற்காக அவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவர்களைக் கட்சியில் இருந்து நீக்கும் கடிதத்தை கட்சியின் அமைப்புச் செயலாளர் முகமட் சுகைமி யாஹ்யா அனுப்பியுள்ளார் என்றும் ஊடகங்கள் உறுதிப் படுத்தின.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.