NATIONAL

கோவிட்-19 தொற்று நோயை எதிர்க்க விவேக தொழில்நுட்பம்!

31 மார்ச் 2020, 2:42 AM
கோவிட்-19 தொற்று நோயை எதிர்க்க விவேக தொழில்நுட்பம்!

ஷா ஆலாம், மார்ச் 31-

விவேக தொழில்நுட்ப பயனீடு கோவிட்-19 தொற்று நோயாளிகளை அடையாளம் காணும் ஆற்றலைக் கொண்டிருப்பதோடு சந்தேக நபர்களுக்கு பரிசோதனையையும் உறுதிப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தொற்று நோய் பரவலைத் தடுப்பதற்கான பரிசோதனையை மேற்கொள்ளும்படி வலியுறுத்தும் உலக சுகாதார அமைப்பின் (டபிள்யூஎச்ஓ) பரிந்துரைக்கு ஏற்ப இந்நடவடிக்கை அமைந்திருப்பதாக சிலாங்கூர்

கோவிட்-19 சிறப்பு நடவடிக்கை மன்றத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அகமது கூறினார்.

"கோவிட்-19 தொற்று நோய் பரிசோதனையை மேம்படுத்துவதற்கு சுகாதார அமைச்சுக்கு உதவுவதற்காக கூடுதலாக 10 பரிசோதனை கூடங்களை அதிகரித்திருக்கும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சு மற்றும் உயர் கல்வி அமைச்சின் நடவடிக்கை பாராட்டத்தக்கது" என்று தனது முகநூலில் அவர் குறிப்பிட்டார். எனினும், பொது மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைப் பின்பற்றாத வரை "கோவிட்-19 தொற்று நோயைக் குணப்படுத்த முடியாது என்றார் முன்னாள் சுகாதார அமைச்சருமான சுல்கிப்ளி.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.