NATIONAL

தஞ்சோங் பியாய் தொகுதியை பாக்காத்தான் தற்காக்கும் !!!

22 செப்டெம்பர் 2019, 3:20 AM
தஞ்சோங் பியாய் தொகுதியை பாக்காத்தான் தற்காக்கும் !!!

சிரம்பான், செப்டம்பர் 22:

எதிர் வரும் ஜொகூர் தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி அத்தொகுதியில் வெற்றியை நிலைநாட்ட போராடும் என்று ஜனநாயக செயல்கட்சியின் (ஜசெக) தகவல் பிரிவு தலைவர் அந்தோணி லோக் சியூ ஃபூக் தெரிவித்தார். மறைந்த டத்தோ வீரா டாக்டர் முகமட் ஃபாரிட் முகமட் ரஃபீக் குடும்பத்தினருக்கு அனுதாபம் தெரிவித்த அந்தோணி லோக், பாக்காத்தான் மாநில மற்றும் மத்திய அளவில் கடுமையாக உழைக்கும் என கூறினார்.

" நாம் தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலை எதிர் கொள்வோம். பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணிக்கு இது ஒரு பெரிய சவாலாக அமையும். டாக்டர் முகமட் ஃபாரிட் சேவை, பண்பு மற்றும் பங்களிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு அனைத்து தேர்தல் எந்திரங்களும் முழுமையாக இறங்கி தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற தொகுதியை வெற்றி பெறும்," என்று நெகிரி செம்பிலான் ஜசெக மாநில மாநாட்டில் மாநில தலைவருமான அந்தோணி லோக் பறைசாற்றினார்.

இந்த மாநாட்டில் ஜசெகவின் பொதுச் செயலாளரும் நிதியமைச்சர் லிம் குவான் எங், நெகிரி செம்பிலான் மந்திரி பெசாரும் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் மாநில தலைவருமான டத்தோ ஸ்ரீ அமினூடின் ஹாரூன் மற்றும் மாநில பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.