கோலாலம்பூர், ஜூலை 30-
மலிவு விலை விமான நிறுவனமான ஏர் ஆசியா, இணையம் மற்றும் கடன் பற்று அட்டை வாயிலாகக் கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளருக்கு வரும் அக்டோபர் முதல் செயலாக்க கட்டணத்தை ரத்து செய்யவிருக்கிறது.
"இன்னும் மலிவான, பாதுகாப்பான மற்றும் மோசடி குறைந்த போக்குவரத்து சேவையை வழங்கும் பொருட்டு நாங்கள் சில கட்டணங்களைத் தொடர்ந்து விதித்து வருகிறோம். எந்தவொரு கட்டணமும் இல்லாத வழிமுறையும் நிச்சயம் கண்டறியப்படும்" என்று இந்நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டான்ஸ்ரீ டோனி ஃபெர்னாண்டஸ் தெரிவித்தார்.
தனது டுவீட்டரில் technologyrules dan #makingairfaresaffordable ஆகிய இரு குறியீடுகள் வாயிலாக இதனை டோனி அறிவித்தார். ஏர் ஆசியா டிக்கெட் செயலாக்க நடவடிக்கைக்கு தற்போது 4 வெள்ளி கட்டணத்தை விதித்து வருகிறது. இது 16 வெள்ளி வரை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.








