NATIONAL

பாசீர் கூடாங் சம்பவம் மீண்டும் நடந்திருக்கக் கூடாது! - துன் டாக்டர் மகாதீர்

25 ஜூன் 2019, 4:04 AM
பாசீர் கூடாங் சம்பவம் மீண்டும் நடந்திருக்கக் கூடாது! - துன் டாக்டர் மகாதீர்

கோலாலம்பூர், ஜூன் 25-

பாசீர் கூடாங்கில் காற்றுத் தூய்மைக்கேட்டை விளைவித்த சம்பவம் மீண்டும் நடைபெற்றிருக்கக் கூடாது என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறினார்.

“இது ஒரு விவேக நடவடிக்கையல்ல. பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்காத தொழில்துறையின் காரணமாக இந்தச் சம்பவம் மீண்டும் நடந்துள்ளது” என்றார் அவர்.

எனவே, இந்த காற்று தூய்மைக்கேட்டிற்கு காரணமான தரப்பினரை அடையாளம் கண்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

பாசீர் கூடாங்கில் கடந்த வியாழக்கிழமை முதல் ஏற்பட்டுள்ள காற்றுத் தூய்மைக்கேட்டால் பலர் மூச்சுத் திணறல் மற்றும் வாந்தி போன்ற உபாதைகளால் பாதிக்கப்பட்டது குறித்து கேட்கப்பட்டபோது பிரதமர் மகாதீர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.