NATIONAL

ஹார்ட் ரொக் கஃபே மற்றும் ஹோட்டல் திட்டம் தொடரும்! - டத்தோஸ்ரீ அன்வார் உறுதி

19 மே 2019, 12:16 PM
ஹார்ட் ரொக் கஃபே மற்றும் ஹோட்டல் திட்டம் தொடரும்! - டத்தோஸ்ரீ அன்வார் உறுதி

போர்ட்டிக்சன், மே 20-

ஹார்ட் ரொக் கஃபே மற்றும் ஹோட்டல் கட்டுமானப் பணி இவ்வாண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று போர்ட்டிக்சன் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இந்தத் திட்டமானது உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகள் உட்பட சில பயன்களை அளிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதர ஹோட்டல்களுக்கு விதிக்கப்படும் நிபந்தனைகள் யாவும் இந்தத் திட்டத்திற்கும் விதிக்கப்படும். இதன் மேம்பாட்டாளரிடம் நடத்திய பேச்சு வார்த்தையின் பயனாக சம்பந்தப்பட்ட தரப்பும் எந்தவொரு விதிமுறை தளர்வையும் எதிர்பார்க்கவில்லை. அதே வேளையில் எந்தவொரு புதிய நிபந்தனையும் அது கோரவில்லை என்றும் அன்வார் தெரிவித்தார்.

முன்னதாக இந்த ஹார்ட் ரொக் கஃபே மற்றும் ஹோட்டல் குறித்து உள்ளூர் மக்கள் தவறான கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தனர். அதன் பெயரைக் கேட்டவுடன் அது நிறைய மது வகைகளை விற்பனை செய்யும் என்று அவர்கள் கருதினர் என்று இங்குள்ள மருத்துவமனைக்கு வருகைப் புரிந்த பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அன்வார் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.