NATIONAL

பாக்காத்தான் ஆட்சியில் தகவல் ஊடகங்களுக்கு முழு சுதந்திரம்

13 மே 2019, 7:41 AM
பாக்காத்தான் ஆட்சியில் தகவல் ஊடகங்களுக்கு முழு சுதந்திரம்

கோலாலம்பூர், மே 12:

ஒரு ஆண்டு கால பாக்காத்தான் ஹாராப்பான்  கூட்டணியின் ஆட்சிக் காலத்தில் மலேசியாவில் ஊடகங்கள் சில சாதகமான முன்னேற்றங்களை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது. அவ்வகையில், இப்புதிய அரசாங்கம் முன்பிருந்த அரசாங்கத்தைப் போல பத்திரிகை சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தாது, அவ்வாறு கட்டுப்படுத்திய சில சட்டங்களை முடக்கவும், விட்டுக்கொடுக்கவும் முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து, உலக பத்திரிக்கை சுதந்திரத்திற்கான மலேசியாவின் தரநிலை, 22 இடங்களைக் கடந்து 123-வது இடத்திற்கு முன்னேறியது. இது ஒரு சிறிய சாதனையாக பார்க்கப்பட்டாலும்தேசிய முன்னணி அரசாங்கம் கவிழ்ந்ததற்குப் பிறகு பத்திரிக்கை சுதந்திரத்திற்கு கிடைத்த புதிய வாய்ப்பு இது என ரிப்போர்ட்டர்ஸ் வித்தாவுட் போர்டர்ஸ் (ஆர்ஒஎப்) நிறுவனம் தெரிவித்துள்ளது.

கார்ட்டூனிஸ்ட் சுனார் மற்றும் சரவாக் ரிப்போர்ட் போன்ற பத்திரிக்கை சார்ந்து செயல்பட்டவர்கள் மீதான இருட்டடிப்பை நீக்கியதன் மூலமாக மீண்டும் அவர்கள் பணிக்கு திரும்பும் வாய்ப்பினை ஏற்படுத்தி உள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

பொய்யான மற்றும் சர்ச்சைக்குரிய செய்திகளை வெளியிடும் சட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டால், மேலும் மலேசிய பத்திரிக்கைக்கு கிடைத்த வெற்றி எனக் கொண்டாடலாம் எனவும், அதற்கு பிறகு புத்ராஜெயாவிலிருந்து எந்தவொரு வழிமுறைகளுக்காகவும் ஊடகங்கள் காத்திருக்கத் தேவையில்லை எனவும் அது குறிப்பிட்டது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.