NATIONAL

ரந்தாவ் தொகுதி இடைத்தேர்தல் ஸ்ரீராமே மீண்டும் பக்காத்தான் வேட்பாளர்

11 மார்ச் 2019, 10:05 AM
ரந்தாவ் தொகுதி இடைத்தேர்தல் ஸ்ரீராமே மீண்டும் பக்காத்தான் வேட்பாளர்

கோலாலம்பூர், மார்ச் 12-

ரந்தாவ் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் பக்காத்தான் கூட்டணியின் வேட்பாளராக மீண்டும் டாக்டர் ஸ்ரீராம் களமிறக்கப்படுகிறார்.

பெட்டாலிங் ஜெயாவில் உள்ள கெ அடிலான் கட்சி அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை அறிவித்தார்.

“அம்னோ தற்போது இன விவகாரங்களைத் தீவிரமாக பேசி வருகின்ற போதிலும், அனைத்து விஷயங்களையும் கருத்தில் கொண்ட பின்னர், இந்திய வேட்பாளரை களமிறக்குவதில் நாங்கள் இணக்கம் கண்டுள்ளோம்” என்று அன்வார் தெரிவித்தார்.

அனைத்து இன மக்களின் நன்மைகளுக்காகவும் பாடுபடும் வேட்பாளரை தாங்கள் தேர்வு செய்துள்ளதாக அவர் சொன்னார்.

மாநில தலைமைத்துவ மன்றம் சமர்ப்பித்த பெயர்ப் பட்டியலை நன்கு பரிசீலித்த பின்னர் மத்திய தலைமைத்துவ டாக்டர் ஸ்ரீராமை தேர்வு செய்ததாக அன்வார் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.