SELANGOR

ஊழலைத் துடைத்தொழிக்க எம்பிகே உறுதி

8 மார்ச் 2019, 2:32 AM
ஊழலைத் துடைத்தொழிக்க எம்பிகே உறுதி

கிள்ளான், மார்ச் 8-

ஊழலுக்கு எதிராக கிள்ளான் நகராண்மைக் கழகம் (எம்பிகே) கொண்டிருக்கும் கடப்பாடு காரணமாக அதன் பணியாளர்கள் மத்தியில் நேர்மை நிலைநிறுத்தப்பட்டடிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஊழலில் இருந்து விடுபட்டிருப்பதாக உறுதிமொழி (ஐபிஆர்) எடுத்துக் கொண்ட பிறகு, மன்றத்தின் பணியாளர்கள் மத்தியில் எந்தவொரு ஊழல் வழக்கும் பதிவாகவில்லை என்று அதன் தலைவர் டத்தோ முகமது யாசிட் பிடின் கூறினார்.

2016ஆம் ஆண்டு ஐபிஆர் அமல்படுத்தப்பட்டது முதல் பணியாளர் ஒருவர் ஊழல் புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது தவிர்த்து வேறு புகார் ஏதும் பெறப்படவில்லை. சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டும் இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்றார் அவர்.

“இந்த ஈராண்டு காலத்தில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த போலும் பணியாளர் எவரும் நீதிமன்றத்தில் இதுவரை தண்டிக்கப்படவில்லை” என்றும் அவர் சொன்னார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.