ஷா ஆலம், பிப்.5:
சிலாங்கூர் காற்பந்து சங்கம் (எஃப்ஏஎஸ்) புதிய தொழில்நுட்ப முறையிலான டிக்கெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. நேற்று முன் தினம் ஷா ஆலம் அரங்கில் நடந்த சூப்பர் லீக் போட்டியின்போது இந்த டிக்கெட் முறை இந்த முறை பயன்படுத்தப்பட்டது.
இந்த முறையானது டிக்கெட் விற்பனையை நிர்வகிக்கும் நடவடிக்கை உட்பட அனைத்து பரிவர்த்தனைகளையும் எஃப் ஏ எஸ் தொடர்பு எண் வழியாக செயல்படும் முறைக்கு மாற்றம் செய்துள்ளதாக அதன் நிர்வாக அதிகாரி டத்தோ ஜைரில் ஆயு இப்ராஹிம் தெரிவித்தார்.
இந்நடவடிக்கையானது ‘கியூஆர்” கோட் தொழில்நுட்ப பயன்படுத்தப்பட்டுள்ளதால், டிக்கெட் விற்பனை முறை எளிதாக்கியதோடு அரங்கிற்கு நுழையும் வெளியேறும் ஆதரவாளர்களின் நடவடிக்கையைக் கண்காணிக்கவும் உதவுகிறது என்றார் அவர்.
நீண்ட காலமாக இந்த முறையை அமல்படுத்த எண்ணியிருந்த சங்கத்தின் நோக்கம் தற்போது நிறைவேற்றியுள்ளது” என்றும் அவர் சொன்னார்.








