SELANGOR

விருந்தோம்பல் கலாசாரம் ஒற்றுமையை வலுப்படுத்தும்

5 பிப்ரவரி 2019, 7:05 AM
விருந்தோம்பல் கலாசாரம்  ஒற்றுமையை வலுப்படுத்தும்

Lசெலாயாங், பிப்.5:

அண்டை அயலார் வீட்டுக்கு வருகை புரியும் கலாசாரமானது சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒற்றுமைக்கு வித்திடும் பெருநாளாக பரிணமிக்க செய்துள்ளது என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.

ஒவ்வோர் ஆண்டும் சீன சமூகத்தினர் மற்றும் சுங்கை துவா வட்டாரத்தில் தமக்கு நெருக்கமானவர்கள் வீடுகளுக்கும் வருகை புரிந்ததை போலவே இவ்வாண்டும் இந்தச் சந்தர்ப்பத்தில் வருகை புரிந்ததாக அவர் சொன்னார்.

வழக்கம் போலவே இம்முறையும் இந்த வட்டாரத்தில் ஒத்துழைப்பு நல்கிய குடியிருப்பாளர்கள் குறிப்பாக நெருங்கிய நண்பர்களுடன் புத்தாண்டு கொண்டாத்தில் பங்கெடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.

சீனப் புத்தாண்டு போலவே நாட்டில் கொண்டாடப்படும் இதர கொண்டாட்டங்களின் போதும் இதுவே தனது வழக்கமான நிகழ்ச்சியாகும் என்றார் அவர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.