NATIONAL

எஸ்எஸ்டி: நிஸ்ஸான் கார்களின் விலை குறைந்தது!!!

13 செப்டெம்பர் 2018, 7:17 AM
எஸ்எஸ்டி: நிஸ்ஸான் கார்களின் விலை குறைந்தது!!!

கோலா லம்பூர், செப்டம்பர் 13:

தான் சோங் மோட்டார் விநியோக நிறுவனம் (இதிசிஎம்) நிஸ்ஸான் ரக கார்களை குறைந்த விலையில் வாங்கிட முடியும் என்று அறிவித்துள்ளது. எஸ்எஸ்டி வரியினால் விலைகள் குறைக்கப்பட்டதாக அந்த நிறுவனத்தின் அறிக்கையில் தெரியவந்துள்ளது.

தான் சோங் மோட்டார் விநியோக நிறுவனம் தனது அறிக்கையில், 1.4%-த்தில் இருந்து 3.4 % வரை விலை குறைய வாய்ப்புள்ளது என்றும் இது ஜிஎஸ்டி அகற்றப்படும் முன்பு அதிகமாக இருந்தது என்று அது விவரித்துள்ளது.

" நிஸ்ஸான் அல்மேரா, கிராண்ட் லிவினா , செரேனா எஸ்-ஐபிரிட் மற்றும் எக்ஸ்-டிரேய்ல் ஆகிய கார்கள் ரிம 69,800-இல் இருந்து ரிம 153,800 வரை விற்பனை செய்யப்படும். இந்த விலை ஜிஎஸ்டி வரி அகற்றப்பட்ட பிறகு குறைந்தது," என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.