SELANGOR

சுங்கை கன்டிஸ் ஹராப்பான் கூட்டணி தேர்தல் பிரச்சாரத்தில் 10,000க்கும் மேற்பட்டவர்கள்!!

2 மே 2018, 2:36 AM
சுங்கை கன்டிஸ் ஹராப்பான் கூட்டணி தேர்தல் பிரச்சாரத்தில் 10,000க்கும் மேற்பட்டவர்கள்!!

கிள்ளான்,மே02:

தாமான் ஸ்ரீ அண்டலாஸ்யில் நடைபெற்ற சுங்கை கன்டிஸ்  ஹராப்பான் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்தின் போது பல்லினத்தை சார்ந்த 10,000க்கும் மேற்பட்ட மக்கள் அலைகடலாய் திரண்டு ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிகழ்விற்கு மந்திரி டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி வருகை அளித்த வேளையில் மக்கள் கூட்டத்தை கண்டு பெரும் மகிழ்ச்சிக் கொண்டார்.

இங்கு கூடிய மக்கள் கூட்டம் புத்ரா ஜெயாவை ஹராப்பான் கூட்டணி கைப்பற்றும் எனும் மாபெரும் நம்பிக்கையினை உயிர்ப்பிப்பதாக குறிப்பிட்டார்.

அதேவேளையில்,மக்கள் ஹராப்பான் கூட்டணி மீது கொண்டிருக்கும் நம்பிக்கையின் சான்று இதுவென்றும் இந்த ஒற்றுமையோடும் ஒருமித்த இலக்கோடும் வரும் மே 9ஆம் தேதி வாக்களித்து ஹராப்பான் கூட்டணியை நாட்டின் புதிய அரசாங்கமாய் வரலாற்று அரசியல் மாற்றத்தை செய்யுங்கள் என்றும் அஸ்மின் கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையில்,சுங்கை கண்டிஸ் தொகுதி வேட்பாளர் சுஹாய்மி ஷாஃபி பல்லின மக்கள் இங்கு பெரும் அளவில் கூடியிருப்பது ஹராப்பான் கூட்டணி மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை புலப்படுத்துவதாக கூறினார்.

இங்கு கூடியிருக்கும் கூட்டத்தை கண்டு மகிழ்ச்சிக் கொள்வதாக கூறிய அவர் வட்சாப் மற்றும் குறுந்தகவல் மூலம் இங்கு வருவோருக்கு வெ.100 வழங்கப்படும் என பொய் செய்தியை நம்பி யாரும் வரவில்லை என்றார்.மாறாய்,நாட்டில் மாபெரும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வந்த விவேகமான மக்கள் சக்தி என்றார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.