SELANGOR

இளம் நீலத்தை தேர்வு செய்யுங்கள்!!!

30 ஏப்ரல் 2018, 5:15 AM
இளம் நீலத்தை தேர்வு செய்யுங்கள்!!!

ஷா ஆலாம்,ஏப்30:

சிலாங்கூர் மாநிலத்தை திறன் மிக்க ஆற்றலோடு ஆட்சிபுரியும் ஆளுமையை கொண்டிருக்கும் இளம் நீலத்தை மக்கள் தேர்வு செய்ய வேண்டும் என கோம்பாக் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கோரிக்கை விடுத்தார்.

இம்மாநிலத்தை சிறந்த நிலைக்கும் அதீத மேம்பாட்டிற்கும் இட்டுச் சென்ற பெருமையை கொண்டிருக்கும் ஹராப்பான் கூட்டணியின் ஆட்சி மலர சிலாங்கூர் வாழ் மக்கள் இளம் நீல சின்னத்தை விவேகமாய் தேர்வு செய்ய வேண்டும் என்றார்.

வரும் மே 9ஆம் தேதி சிலாங்கூர் வாழ் வாக்காளர்கள் அதிகமாய் வாக்களிக்க முன் வரவேண்டும்.அதேவேளையில்,அவர்கள் நேர்மையும் நீதியும் மற்றும் ஆற்றலும் மிக்க ஹராப்பான் கூட்டணியை தேர்வு செய்ய வேண்டும் என்றும் நினைவுறுத்தினார்.

ஹராப்பான் கூட்டணியின் சின்னமான இளம் நீலத்தை தேர்வு செய்யுங்கள்.வேறு சின்னங்களை புறக்கணியுங்கள் என்றார்.மக்களின் பொருளாதாரத்தையும் வாழ்வாதாரத்தை காத்திட மறந்த தேசிய முன்னணியை புறக்கணியுங்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜி.எஸ்.டியால் மக்களின் வாழ்வாதாரத்தை நெறித்துக் கொண்டிருக்கும் தேசிய முன்னணி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்திய அஸ்மின் அலி சிலாங்கூரில் சமூகநலன் திட்டங்களும் உதவிகளும் மதம்,இனம் கடந்து தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும்,சிலாங்கூரில் ஜி.எஸ்.டி இல்லை.ஆனால்,மக்கள் நலன் பேணும் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டதாகவும் கூறினார்.வரிகளை நாம் அகற்றியதாகவும் கடந்த நான்கு ஆண்டில் வெ.300 மில்லியன் வரியை நாம் வசூல் செய்யவில்லை என்றும் கூறினார்.

நாம் மக்களிடம் வரி வசூல் செய்யவில்லை.மாறாய்,மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தினோம் என விவரித்த அஸ்மின் அலி நாட்டின் 14வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியை புறக்கணித்து ஹராப்பான் கூட்டணி சின்னமான இளம் நீலத்தை தேர்வு செய்யுங்கள் என கோம்பாக் செத்தியா இடத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட இந்தியர்கள் முன்னிலையில் இவ்வாறு கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.