NATIONAL

தேர்தல் மோசடிகளை முழுமையாக முறியடிக்க மிக அதிகமான விகிதத்தில் வாக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும்

21 மார்ச் 2018, 8:03 AM
தேர்தல் மோசடிகளை முழுமையாக முறியடிக்க மிக அதிகமான விகிதத்தில் வாக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 21:

எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலில் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு தங்களின் உன்னதமான கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பெர்சே இயக்கத்தின் முன்னாள் தலைவர் மரியா சின் அப்துல்லா கூறினார். மிக அதிகமான அளவிலான வாக்காளர்கள் வாக்களித்தால் மட்டுமே சம்பந்தப்பட்ட நபர்களின் தேர்தல் மோசடிகளை முழுமையான முறையில் முறியடிக்க முடியும் என்றார்.

"  நமக்கு நியாயமான மற்றும் நீதியான முறையில் தேர்தல் நடைபெற வேண்டும். ஆனால் இந்த போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்றால் இதுவே கடைசி முயற்சி ஆகும். கடந்த 13-வது பொதுத் தேர்தலில் நியாயமான மற்றும் நீதியான முறையில் தேர்தல் நடைபெறவில்லை ஆனாலும் அதிகமான அளவில் வாக்காளர்கள் எண்ணிக்கை திரளாக வந்து வாக்களித்ததால் தேர்தலில் தில்லுமுல்லுகளை முறியடிக்க முடிந்தது. ஆகவே, அனைவரும் வாக்களிக்க வேண்டும்," 8 அவின்யூ வணிக மையத்தில் நடைபெற்ற பெர்சே இயக்கத்தின் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.