NATIONAL

நஜிப் & அம்னோ, பாக்காத்தானின் தாளத்திற்கு ஏற்ப ஆடுகிறது ?

28 பிப்ரவரி 2018, 2:02 AM
நஜிப் & அம்னோ, பாக்காத்தானின் தாளத்திற்கு ஏற்ப ஆடுகிறது ?

ஷா ஆலம், பிப்ரவரி 28:

பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தோல் கட்டணம் பொது மக்களுக்கு சுமையை ஏற்படுத்துகிறது என்ற கூற்று அம்னோ தேசிய முன்னணியினருக்கு எந்த ஒரு விவேக திட்டமும் இல்லை, மாறாக பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் திட்டங்களை காப்பியடிப்பதுதான் என்று தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. நஜீப் ரசாக்கின் ஒப்புதல், பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியினர் நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் மேல்மட்ட நிலையில் உள்ள அம்னோ தேசிய முன்னணி தலைவர்கள் இன்னும் மக்களின் பிரச்சினைகளை பற்றி அக்கறை கொண்டதாக தெரியவில்லை என்று கெஅடிலான் கட்சியின் தொடர்பு பிரிவு இயக்குனர் பாஃமி பாஃசில் தெரிவித்தார்.

நஜீப் ரசாக்கின் ஒப்புதல் அறிக்கையில் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் போராட்டத்தில் நியாயம் இருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டார். இதன் வழி அடுத்து வரும் 14-வது பொது தேர்தலில் மக்களுக்காக சேவை ஆற்றி வரும் கூட்டணியை தேர்ந்தெடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. நன்கு அனுபவம் கொண்ட பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி தலைமைத்துவத்தில் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படத் தொடங்கி உள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.