NATIONAL

வான் அஸிஸா: அன்வார் இப்ராஹிம் ஜூன் 11-இல் விடுதலை ஆவார்!!!

6 ஜனவரி 2018, 7:38 AM
வான் அஸிஸா: அன்வார் இப்ராஹிம் ஜூன் 11-இல் விடுதலை ஆவார்!!!

காஜாங், ஜனவரி 6:

கெஅடிலான் கட்சியின் மூத்த ஆலோசகர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூடிய விரைவில் சிறையிலிருந்து விடுதலை ஆகிவிடுவார் என்று பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் தலைவர் டத்தோ ஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் கூறினார். எந்த பிரச்சனை இல்லை என்றால் ஜூன்  11-இல் அன்வார் இப்ராஹிம் விடுதலை ஆகிவிடுவார் என்றார்.

" எல்லா வல்ல இறைவன் ஆசியோடு, சட்ட வரையறைக்குற்பட்டு ஜூன் 11-இல் அன்வார் இப்ராஹிம் விடுதலை செய்யப் படுவார்," என்று ஸ்ரீ செம்பாக்கா மண்டபத்தில் நடைபெற்ற பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் மகளிர் மாநாட்டை தொடங்கி வைத்த போது தலைவர் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அன்வார் சிறைவாசம் அனுபவித்த போதிலும் அவரின் உணர்வு மாநாட்டில் உணர முடிகிறது என்றார். இன்றோடு அன்வார் இப்ராகிமின் சிறைவாசம் 1,601 நாட்கள் ஆகும் என்று அனைவருக்கும் நினைவு படுத்தினார்.

#கு. குணசேகரன் குப்பன்

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.