RENCANA PILIHAN

பிகேஎன்எஸ் எப்சியின் தலைமைப் பொறுப்பை ராஜகோபால் மீண்டும் ஏற்றார்

22 நவம்பர் 2017, 4:15 AM
பிகேஎன்எஸ் எப்சியின் தலைமைப் பொறுப்பை ராஜகோபால் மீண்டும் ஏற்றார்

ஷா ஆலம், நவம்பர் 22:

2018-இன் பிகேஎன்எஸ் எப்சி அணியின் தலைமை பயிற்சியாளராக டத்தோ கெ. ராஜகோபால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

முன்னாள் தேசிய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளரான ராஜகோபால், இதற்கு முன்பு 1990-இல் இருந்து 1998-வரை 'ரெட் என்ஸ்' என்று அழைக்கப்படும் பிகேஎன்எஸ் எப்சியின் பயிற்சியாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ராஜகோபாலை தலைமை பயிற்சியாளராக அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி பிகேஎன்எஸ் தலைமையகத்தில் அதன் தலைமை செயல் அதிகாரி சித்தி ஸூபைடா அப்துல் ஜபார் மற்றும் செயலாளர் முகமட் அடி ஹார்மிஸி அரிபீன் முன்னிலையில் நடைபெற்றது.

#வீரத் தமிழன்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.