RENCANA PILIHAN

சிலாங்கூர் மந்திரி பெசாரின் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்

24 ஜூன் 2017, 7:45 AM
சிலாங்கூர் மந்திரி பெசாரின் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்

ஷா ஆலம், ஜூன் 24:

நோன்புப் பெருநாளின் உன்னதத்தை காத்து இந்த ரமாலான் மாதத்தில் பசியையும் தாகத்தையும் பொறுத்து இஸ்லாமிய சமய மாண்பினை நெறிப்படுத்திய அனைத்த்கு இஸ்லாமிய சகோதரர்களுக்கும் இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்.

அமைதியையும் சுபிட்சத்தையும் எதிர்பார்க்கும் மனித மனங்கள் அதன் இலக்கை நோக்கி முன்னெடுக்கும் இந்த நோன்புப் பெருநாளில் அமைதிகாத்து நோன்பு துறந்து இனிய புனித பெருநாளை கொண்டாடுவதில் நாம் பெருமிதம் கொள்ள வேண்டும்.இந்த இனிய மாண்பு மிக்க பெருநாளில் நாடும் நாட்டு மக்களும் நலம் பெற்று மேம்பாடு காண நாம் அனைவரும் ஒன்றிணைந்து கைகோர்த்தல் வேண்டும்.

நோன்புப் பெருநாளை ஒருமைப்பாடுடனும் சகோதர உறவுடனும் மனித மாண்புடனும் நாம் கொண்டாடி மகிழ வேண்டும்.அதேவேளையில்,மனித இனத்தின் நற்பண்புகளும் நன் சிந்தனைகளும் இந்த நோன்புப் திருநாளின் போது உயிர்ப்பிக்க வேண்டும்.மேலும்,ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தலும் புரிந்துணர்வும் மேலோங்க வேண்டும்.

இஸ்லாமிய மாண்புடனும் மலேசியர்கள் எனும் பெருமையுடனும் நாம் அனைவரும் நோன்புப் பெருநாளை மாண்புடன் கொண்டாடி மகிழ எல்லாம் வள்ள ஹல்லா துணை புரிவார் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தனது நோன்புப் பெருநாள் வாழ்த்து செய்தியில் தெரிவித்துக் கொண்டார்.

டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார்

#கேஜிஎஸ்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.