ஜோகூர் பாரு, 19 ஏப்ரல்
மேலும் சில முக்கிய நபர்கள் ஜோகூரில் நடந்த சொத்துரிமை ஊழல் வழக்கில் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட உள்ளனர் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் நடவடிக்கை பிரிவின் துணை தலைவர், டத்தோ அஸாம் பாகி தெரிவித்தார்.
தொடர்ந்து கூறுகையில், சம்பந்தப்பட்ட நபர்கள் அண்மையில் தடுத்து வைத்து விசாரணை நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் ஆவார்.
அதையடுத்து அவர் 33 குற்றச்சாட்டுகளை எதிர் நோக்கியுள்ள ஜோகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அப்துல் லத்தீப் பாண்டி மீண்டும் ஒருமுறை இன்னோரு நபரோடு குற்றஞ்சாட்டப்படலாம் என்று கூறினார்.
"நான் பெயரை வெளியிட மாட்டேன், ஆனால் அவர்கள் அண்மையில் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டவர்களே ஆகும் "
அவர் ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை பிரிவு இயக்குனர் மற்றும் ஜோகூர் மாநில இயக்குனர் ஆகியோருடன் கூட்டத்திற்கு பிறகு கூறினார்.
-AA-








