NATIONAL

ஹராப்பான் கூட்டணி நெகிரி செம்பிலானை கைப்பற்றும்

16 ஏப்ரல் 2017, 2:56 AM
ஹராப்பான் கூட்டணி நெகிரி செம்பிலானை கைப்பற்றும்

சிராம்பான் - தேசிய முன்னணியிடமிருந்து நாட்டின் 14வது பொது தேர்தலில் நெகிரி செம்பிலான் மாநிலத்தை ஹராப்பான் கூட்டணி கைப்பற்றும் என அம்மாநில கெஅடிலான் தலைவர் அமிரூடின் ஹருண் நம்பிக்கை தெரிவித்தார்.

தற்போது இம்மாநிலத்தில் எதிர்கட்சி கூட்டணியினர் மத்தியில் மேபோங்கியிருக்கும் ஒற்றுமையும் புரிந்துணர்வும் அதனை உறுதி செய்யும் என்றும் கூறிய அவர் மக்களின் ஆதரவும் நம்பிக்கையும் நமது கூட்டணிக்கு பெரும்பான்மையாய் இருப்பதாகவும் அவர் நினைவுறுத்தினார்.

நெகிரி செம்பிலான் மாநிலத்தை கைப்பற்றும் ஆயத்தப் பணியினை மாநில ஹராப்பான் கூட்டணி விவேகமாய் மேற்கொண்டு வருவதாகவும் கெஅடிலான்,ஜசெக மற்றும் அமானா கட்சிகள் கூட்டணியில் இம்முறை பாக்காதான் ஹராப்பான் நெகிரி செம்பிலான் மாநிலத்தை கைப்பற்றும் எனும் நம்பிக்கை இருப்பதாகவும் மாநில கெஅடிலான் மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இதனை வெளிப்படுத்தினார்.

 

கடந்த முறை 36 சட்டமன்ற தொகுதிகளில் 14 தொகுதிகளில் ஹராப்பான் கூட்டணி வென்றுள்ள நிலையில் நாட்டின் 14வது பொது தேர்தலில் அத்தொகுதிகளை தற்காத்துக் கொள்வதோடு கூடுதலாய் இன்னும் 7 தொகுதிகளை கைப்பற்றினால் சிறிய பெரும்பான்மையில் மாநில ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் 14வது பொது தேர்தலில் நெகிரி செம்பிலான் மாநிலம் ஹராப்பான் கூட்டணி வசமாக கெஅடிலான்,ஜசெக மற்றும் அமானா கூட்டணியில் ஒற்றுமையாலும் புரிந்துணர்வாலும் அஃது சாத்தியமாகும் என்றும் அவர் நினைவுறுத்தினார்.

 

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.